மேலும் செய்திகள்
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கோரி ஆர்ப்பாட்டம்
07-Oct-2025
நாளைய மின் தடை
07-Oct-2025
சென்னை, லேடி சிவசாமி அய்யர் மகளிர் பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி, மயிலாப்பூரில் உள்ள பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.இதில் 18 அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்று நடந்த முதல் போட்டியில், பெரம்பூர் எம்.எச்., சென்னை அரசு பள்ளி அணி, 15 - 11, 15 - 12, 15 - 5, 15 - 7 என்ற கணக்கில் எழும்பூர் பிரசிடென்சி பள்ளியை தோற்கடித்தது.குண்டூர் சுப்பையா பள்ளி, 15 - 13, 17 - 15 என்ற கணக்கில் மாதவரம் அரசு பள்ளியை வீழ்த்தியது.மற்ற போட்டியில், ஜேஸி மோசஸ் பள்ளி, 13 - 15, 15 - 12, 15 - 5 என்ற கணக்கில் கோல சரஸ்வதி பள்ளியையும், லேடி சிவசாமி அணி, 15 - 2, 15 - 2 என்ற கணக்கில் புரசைவாக்கம் பெனிட்டிக் பள்ளியையும் தோற்கடித்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
07-Oct-2025
07-Oct-2025