உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணை போட்டோ எடுத்த வங்கி அதிகாரிக்கு கவனிப்பு

பெண்ணை போட்டோ எடுத்த வங்கி அதிகாரிக்கு கவனிப்பு

திருமங்கலம், கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த, 18 வயது இளம்பெண், ஆண் நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு, திருமங்கலத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு வந்துள்ளார்.அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர், இளம்பெண்ணை மொபைல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதைப் பார்த்த அப்பெண்ணின் நண்பர்கள், அந்த நபரின் மொபைல்போனை வாங்கி சோதித்த போது, அப்பெண்ணின் புகைப்படம் இருந்துள்ளது.அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து, ஆட்டோவில் ஏற்றிச் சென்று, திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.விசாரணையில் அந்த நபர், கொளத்துாரைச் சேர்ந்த, 40 வயது நபர் என்பதும், அரசு வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிவதும் தெரிந்தது.தவறுதலாக படம் எடுத்ததாகக் கூறி, இளம்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். புகார் திரும்ப பெறப்பட்டதால், வங்கி அதிகாரியை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை