உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஸ்டூடியோவில் கைவரிசை ஊழியருக்கு வலை

ஸ்டூடியோவில் கைவரிசை ஊழியருக்கு வலை

கொளத்துார், கொளத்துார், பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்தவர் அருளானந்தம், 51. இவர், திரு.வி.க., நகர் எஸ்.ஆர்.பி., கோவில் தெரு பகுதியில், போட்டோ ஸ்டூடியோ ஒன்றை, கடந்த 35 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.கடந்த 18ம் தேதி, செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவராஜ் என்பவர் ஸ்டூடியோவில் வேலைக்கு சேர்ந்துள்ளார். வீடு செங்கல்பட்டில் இருந்ததால், ஒரு வாரமாக கடையிலேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22ம் தேதி காலை வழக்கம் போல், அருளானந்தம் கடைக்கு போனபோது கிறிஸ்தவராஜை காணவில்லை.மேலும், கடையில் இருந்த மூன்று கேமரா, எட்டு ஹார்ட்டிஸ்க், இரண்டு பென்டிரைவ், பிளாஷ் உள்ளிட்ட பொருட்களும் மாயமாகியிருந்தன. காணாமல் போன பொருட்களின் மதிப்பு 5 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும். இது குறித்து திரு.வி.க.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி