உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எண்ணுார் வடக்கு பகுதிக்கு தனி காவல் நிலையம் அமையுமா?

எண்ணுார் வடக்கு பகுதிக்கு தனி காவல் நிலையம் அமையுமா?

எண்ணுார், மக்கள் தொகை அதிகரித்து வருவதால், எண்ணுார் வடக்கு பகுதிக்கு, தனி காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகர காவல் எல்லைக்குள் இருந்த எண்ணுார் காவல் நிலையம், ஆவடி மாநகர காவல் எல்லைக்கு மாற்றப்பட்டது. எண்ணுார் - அசோக் லேலண்ட் நிலத்தில் உள்ள தனி கட்டடத்தில் செயல்பட்டு வந்த எண்ணுார் காவல் நிலையம், சுனாமி குடியிருப்பில் கட்டப்பட்ட புதிய நிரந்தர கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்திலேயே, எண்ணுார் அனைத்து மகளிர் காவல் நிலையம், எண்ணுார் உதவி கமிஷனர் அலுவலகம் மற்றும் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர், குற்றப்பிரிவு ஆய்வாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் தொகை அதிகமுள்ள சுனாமி குடியிருப்பில், அதிக குற்றச் செயல்கள் நடந்து வருவதால், குற்றவாளிகளை கண்காணிக்க ஏதுவாக, காவல் நிலையம் அங்கேயே இடம்பெற்றது. இந்நிலையில், கத்திவாக்கம் மேம்பாலத்திற்கு வடக்கு பக்கம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், வழக்குகள் தொடர்பாக எண்ணுார் காவல் நிலையத்திற்கு வருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், எர்ணாவூர் அனல்மின் நிலைய குடியிருப்பு அருகே, 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு, மக்கள் குடியேறும் பட்சத்தில், எண்ணுார் காவல் நிலையத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எனவே, சாத்தாங்காடு மற்றும் மீஞ்சூரின் சில பகுதிகளை சேர்த்து, எண்ணுார் காவல் நிலையம், வடக்கு - தெற்கு என, இரண்டாக பிரிக்க வேண்டும். இரண்டு காவல் நிலையங்கள் செயல்படும் பட்சத்தில், வழக்குகள் விரைந்து விசாரிப்பது மற்றும் குற்றவாளிகளை கைது செய்தல் போன்ற பணிகள் எளிதாகும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை