உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எண்ணுார் மூதாட்டி கொலையில் தலைமறைவான பெண் கைது

எண்ணுார் மூதாட்டி கொலையில் தலைமறைவான பெண் கைது

எண்ணுார், மூதாட்டி கொலை வழக்கில், கொலையாளிக்கு அடைக்கலம் கொடுத்த, பெண் கைது செய்யப்பட்டார். எண்ணுார், சத்தியவாணி முத்துநகரைச் சேர்ந்தவர் பாக்கியம், 65. இவரது பேரன் மகி, 26, என்பவரை முன்விரோதத்தில் கொலை செய்ய, கடந்த மே மாதம் மூன்று பேர், அவரது வீட்டிற்கு வந்தனர். அப்போது, மகி இல்லாததால், வாசலில் அமர்ந்திருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி விட்டு, தப்பினர். இதில் மூதாட்டி இறந்தார். எண்ணுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகள் ஜீவானந்தம், அஜய், விக்ரம் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த, ஜீவானந்தத்தின் சித்தியான, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கத்தைச் சேர்ந்த மோகனவள்ளி, 37, என்பவர் தலைமறைவானார். . எண்ணுாரில் உள்ள உறவினர் வீட்டில் மோகனவள்ளி பதுங்கியிருப்பதாக, உதவி ஆய்வாளர் விமலநாதன் தலைமையிலான, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், மோகனவள்ளியை கைது செய்தனர். விசாரணைக்கு பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை