உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கன்டெய்னர் லாரி மோதி பெண் பலி

கன்டெய்னர் லாரி மோதி பெண் பலி

மதுரவாயல்,:மதுரவாயலில், ஸ்கூட்டர் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார்.மாங்காடைச் சேர்ந்தவர் பானு, 33. இவரது உறவினர் நிர்மலா, 47. இருவரும் நேற்று, அண்ணா நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். ஸ்கூட்டரை பானு ஓட்டினார். பின்னால் நிர்மலா அமர்ந்து சென்றார். மதுரவாயல் அடுத்த வானகரம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த நிர்மலாவின் மீது, கன்டெய்னர் லாரி ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.பானு லேசான காயங்களுடன், உயிர் தப்பினார். கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கன்டெய்னர் லாரி ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தி, 47, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை