| ADDED : ஜன 07, 2024 12:37 AM
சென்னை, புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியை, 2019ல் இரவு நேரத்தில் அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக, அவரது உறவுக்காரர் உட்பட நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோரை, புளியந்தோப்பு மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவர்கள் தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, 'போக்சோ' வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நீதிமன்றம் நேற்று, நான்கு பெண்களில், மூவருக்கு தலா, 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்தும், ஒரு பெண்ணுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. ஆண் விடுதலை செய்யப்பட்டார்.சூளைமேடில் வசிக்கும் 50 வயது பெண் ஆதரவில், 15 வயது சிறுமி உள்ளார். இச்சிறுமிக்கு பெற்றோர் கிடையாது.அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், பஷீர் சுல்தான், 50, ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதற்கு அந்த பெண்ணும் உடந்தையாக இருந்துள்ளார்.இதுகுறித்து, சிறுமியின் உறவினர் புகாரின்படி, அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து, மணிகண்டன் மற்றும் பஷீர் சுல்தான் ஆகியோரை, போக்சோவில் நேற்று கைது செய்தனர். அந்த பெண் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.