உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இலக்கிய திருவிழாவில் 1,000 மாணவர்கள் ஆர்வம்

இலக்கிய திருவிழாவில் 1,000 மாணவர்கள் ஆர்வம்

முகலிவாக்கம்:வேலம்மாள் பள்ளி குழுமத்தின் முகலிவாக்கம் 'ஓலஜி டெக்' பள்ளியில், இலக்கிய திருவிழா நடந்தது.வாசிப்புத் திறனை ஊக்குவிக்கவும், இலக்கிய ஆர்வத்தை மாணவர்களிடம் மேம்படுத்தவும், இப்பள்ளியில் புதிய முயற்சியாக 'போதி மரத்தின் கீழ் - 2023' என்ற தலைப்பில், இவ்விழா நடத்தப்பட்டது. இதில், 1,000த்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.குழந்தைகளுக்கான புத்தக எழுத்தாளர்கள், கதைச் சொல்லிகள், ஓவியர்கள் பங்கேற்றனர். இவர்கள், குழந்தைகளுக்கான புத்தகங்களைப் பற்றி பேசியும், குழந்தைகளுடன் கலந்துரையாடியும், அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவித்தனர்.குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற வகையில், வெவ்வேறு அமர்வுகளில் புத்தக செயல்பாடுகள் நடத்தப்பட்டன.வேலம்மாள் பள்ளி குழுமத்தின் சேர்மன் முத்துராமலிங்கம் முன்னிலையில், இயக்குனர் சசிகுமார், கீதாஞ்சலி சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை