உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  புறநகரில் 11 ஏரிகள் நிரம்பின

 புறநகரில் 11 ஏரிகள் நிரம்பின

தாம்பரம்: 'டிட்வா' புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில், சென்னை புறநகரில் உள்ள அகரம்தென், செம்பாக்கம், சேலையூர், நன்மங்கலம், பெருங்களத்துார் பெரிய ஏரி மற்றும் சிற்றேரி, புலிக்கொரடு, வேங்கைவாசல் பெரிய ஏரி மற்றும் சிற்றேரி, தாம்பரம், கடப்பேரி என, 11 ஏரிகள் நிரம்பியுள்ளன. தொடர்ந்து மழை பெய்யும்பட்சத்தில், எஞ்சியுள்ள ஏரிகளும் நிரம்பி, கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி