உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆண்டுக்கு 15,000 பேர் பக்கவாதத்தால் பாதிப்பு

ஆண்டுக்கு 15,000 பேர் பக்கவாதத்தால் பாதிப்பு

சென்னை: ''சென்னையில், ஆண்டுக்கு 15,000 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்,'' என, எம்.ஜி.எம்., மலர் மருத்துவமனையின் நரம்பியல் சிகிச்சை நிபுணர் கார்த்திகேயன் தெரிவித்தார். டாக்டர் கார்த்திகேயன் கூறியதாவது: உலகளவில், மனிதர்களின் உயிரிழப்புக்கான முக்கிய காரணங்களில், பக்கவாதம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நரம்பியல் சார்ந்த பிரச்னையால் பலர் உயிரிழக்கின்றனர். சென்னையில் மட்டும், ஆண்டிற்கு, 15,000 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாத பாதிப்பு, இளைஞர்கள், பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதற்கு, உடல் உழைப்பு இன்மை, உடற்பயிற்சியின்மை, துரித உணவு முறை, ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. எனவே தான், மருத்துவமனையில் பக்கவாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான, திறன் கொண்ட டாக்டர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, எந்நேரத்திலும் அவசர காலத்தில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான, வழிகாட்டுதல்களை வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை