உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பகுஜன் சமாஜ் கட்சியினர் 200 பேர் கைது

பகுஜன் சமாஜ் கட்சியினர் 200 பேர் கைது

பெரம்பூர், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், 30 பேர் மீது சமீபத்தில் குற்றkfபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில், 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் என்கவுன்டரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த நிலையில், பெரம்பூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் உள்ள புத்தர் கோவில் வரை, மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடத்த பகுஜன் சமாஜ் கட்சியினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், ஐந்து பேர் மட்டுமே அமைதி ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டும் என, போலீசார் கட்டுப்பாடுகள் விதித்திருந்தனர்.ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியினர் இதை ஏற்க மறுத்து, நேற்று மாலை பெரம்பூர் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை, செம்பியம் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைது நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்து, மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் பகுஜன் சமாஜ் கட்சியினர். சில நிமிடங்கள் மறியலில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி