உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 23ல் மாநில செஸ் போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு

23ல் மாநில செஸ் போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு

சென்னை: செம்பாக்கத்தில் சிறுவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி, வரும் 23ம் தேதி நடக்கிறது. ஜி.எம்., செஸ் அகாடமி சார்பில், சிறுவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி, தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் உள்ள ஆல்பா சர்வதேச மற்றும் மெட்ரிக் பள்ளியில், வரும் 23ம் தேதி நடக்கிறது.போட்டியில், எட்டு, 10, 13, 25 வயதுக்குட்பட்டோருக்கு தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சிறுவர் - சிறுமியர் பங்கேற்கின்றனர். 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 25 இடங்களை பிடிப்போருக்கு, பரிசுகள் வழங்கப்படுகின்றன. போட்டியில் பங்கேற்க விரும்புவோர், 21ம் தேதிக்குள் பதிவு செய்துக் கொள்ளலாம்.மேலும், விபரங்களுக்கு, 88382 29938, 99415 14097 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ