உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  241 பேருக்கு தாலிக்கு தங்கம்

 241 பேருக்கு தாலிக்கு தங்கம்

சென்னை: சமூக நலத்துறை சார்பில், திருமணமான பெண்களுக்கு, தாலிக்கு தங்க நாணயம் மற்றும் நிதி உதவி வழங்கும் விழா, சென்னை பிராட்வே, பிரகாசம் சாலையில் உள்ள பாரதி மகளிர் கல்லுாரியின் அரங்கில் நடந்தது. இவ்விழாவில், 241 பயனாளிகளுக்கு, தலா 8 கிராம் தங்க நாணயத்தை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். திருமண நிதி உதவியாக, தலா, 50,000 ரூபாய் வீதம் மொத்தமாக, 1.16 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மேயர் பிரியா, மாவட்ட சமூகநல அலுவலர்கள் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை