உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தனியார் ஊழியர் வீட்டில் 25 சவரன் நகைகள் திருட்டு

தனியார் ஊழியர் வீட்டில் 25 சவரன் நகைகள் திருட்டு

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வீட்டின் கதவை உடைத்து, 25 சவரன் தங்க நகை மற்றும் 200 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, பென்னலுார் சுகம்தரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், 40; ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர். கடந்த வெள்ளிக்கிழமை, குடும்பத்தினருடன் கோடம்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்ற கண்ணன், நேற்று காலை வீடு திரும்பினார். வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 25 சவரன் தங்கம் மற்றும் 200 கிராம் வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. கண்ணன் புகாரையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை