உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செயின் பறிப்பு 28 பேர் கைது

செயின் பறிப்பு 28 பேர் கைது

சென்னை:சென்னையில், செயின் பறிப்பு மற்றும் மொபைல் போன் திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களுக்கு, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை போலீசார், நேற்றுடன் ஏழு நாட்களாக, சென்னையில் பதிவான, செயின் பறிப்பு மற்றும் மொபைல் போன் திருட்டு தொடர்பாக, 20 வழக்குகள் குறித்து துப்பு துலக்கி, 28 பேரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.இவர்களிடம் இருந்து, 34 சவரன் நகை, 315 கிராம் வெள்ளி பொருட்கள், எட்டு மொபைல் போன்கள், 1.78 லட்சம் ரூபாய் ரொக்கம், இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை