உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி மோதி இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.28 லட்சம்

லாரி மோதி இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.28 லட்சம்

சென்னை, சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், 'எலக்ட்ரீஷியன்' ஆக பணிபுரிந்தவர் வினோத்குமார், 30. இவர், 2019 டிச., 22ல், எளாவூரிலிருந்து ஆலாடு நோக்கி, தன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலை அருகே, வினோத்குமாரின் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியது. இதில், படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த நிலையில், கணவரின் இறப்புக்கு 45 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், வினோத்குமாரின் மனைவி லட்சுமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:விபத்தில் இறந்தவர் குடிபோதையில் இருந்தார் என்பதை உரிய சான்றுகளுடன் நிரூபிக்கப்படவில்லை. கவனக்குறைவு, அதிவேகமாக லாரியை இயக்கியதே, விபத்துக்கு பிரதான காரணம். எனவே, மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 28.25 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை