உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கண்ணகிநகர்: ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில், கஞ்சா பதுக்கி விற்பதாக, கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம் இரவு, அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு, 4.5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், ஓ.எம்.ஆர்., எழில் நகரைச் சேர்ந்த அருண், 34, சுரேஷ், 27, ரவீந்திரன், 28, ஆகியோர், வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, ஓ.எம்.ஆரில் உள்ள சில்லரை வியாபாரிகளுக்கு 'சப்ளை' செய்வது தெரிந்தது. மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை