உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் பிடிபட்டனர்

ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் பிடிபட்டனர்

தண்டையார்பேட்டை:சென்னை, தண்டையார்பேட்டை பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். நேற்று காலை நான்கு இருசக்கர வாகனத்தில், அரிசி மூட்டையுடன் வந்த ஐந்து நபர்களை மடக்கி விசாரித்தனர். அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல், 32, சக்திவேல், 29, ஜோசப், 37, வெங்கடேசன், 34 மற்றும் கார்த்திக், 30 என்பதும், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதியில் பொது மக்களிடம் இருந்து குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி, ஆந்திர மாநிலம் தடா பகுதியில் உள்ள உணவகங்களுக்கு, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 50 கிலோ எடை உள்ள 25 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, ஐந்து பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி