உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டில் 5 சவரன் நகை மாயம்: பழுது பார்க்க வந்தோர் மீது புகார்

வீட்டில் 5 சவரன் நகை மாயம்: பழுது பார்க்க வந்தோர் மீது புகார்

திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி, துளசிங்க பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சம்பத், 38. அவரது மனைவி ஸ்ரீதேவி, 34. இரண்டு நாட்களுக்கு முன், இவரது வீட்டில் சுவர்களில் பழுது பார்பதற்காக, தெரிந்த நபர் வாயிலாக இருவர் வந்துள்ளனர். அவர்களிடம் வீட்டின் சாவியை கொடுத்துவிட்டு, சம்பத் குடும்பத்தினர் வெளியில் சென்றுள்ளனர். பழுதடைந்த பகுதிகளை சீரமைத்துவிட்டு, சாவியை இரும்பு கேட்டில் தொங்கவிட்டு, தகவல் சொல்லாமல் இருவரும் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் பூஜை பொருட்களை சுத்தம் செய்வதற்காக சாமி அறைக்கு ஸ்ரீதேவி சென்ற போது, அங்கு சில வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரிந்தது.சந்தேகமடைந்து வீட்டை சோதித்த போது, 4 சவரன் செயின் மற்றும் 1 சவரன் கம்மல் காணாமல் போனது தெரியவந்தது. பழுது பார்க்க வந்தவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக, சம்பத் அளித்த புகாரின் படி, ஜஸ் ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை