உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒரே இடத்தில் 6 குப்பை தொட்டி சாந்தி காலனியில் சுகாதார சீர்கேடு

ஒரே இடத்தில் 6 குப்பை தொட்டி சாந்தி காலனியில் சுகாதார சீர்கேடு

அண்ணா நகர், பொதுமக்களுக்கு இடையூறாக, ஒரே இடத்தில் ஆறு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, அண்ணா நகர் மண்டலம், சாந்தி காலனி, ஐந்தாவது அவென்யூ சாலையில் ஏராளமான குடியிருப்புகள், அலுவலகம் மற்றும் வணிக ரீதியாக கடைகளும் இயங்கி வருகின்றன.இதேபோல், தனியார் பள்ளி மற்றும் கல்லுாரியும் செயல்படுகின்றன.இச்சாலை வழியாக தினமும் நுாற்றுக்கணக்கானோர் பயணிக்கின்றனர்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடமான, ஐந்தாவது மற்றும் இரண்டாவது அவென்யூ சாலையில், ஒரே இடத்தில் ஆறு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:முக்கிய பகுதியின் நடுவே, சென்னை மாநகராட்சி சார்பில் ஆறு குப்பை தொட்டிகள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இதனால், காலையும் மாலையும் 'பீக் ஹவர்' நேரங்களில் அவ்வழியாகச் செல்வோர் சிரமப்படுகின்றனர்.அதேபோல், 10வது பிரதான சாலையில் இயங்கும் பிரியாணி கடைகளின் கழிவுநீரை சாலையில் கொட்டி, சீர்கேடு ஏற்படுத்துகின்றனர். இதனால், நடைபாதையில் நடந்து செல்ல முடியவில்லை. இதுகுறித்து கேட்டால், தகாத வார்த்தையால் திட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், இந்த குப்பை தொட்டிகளை இடம் மாற்றம் செய்து, அத்துமீறும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை