உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடியில் பறிமுதல் செய்த 730 கிலோ கஞ்சா அழிப்பு

ஆவடியில் பறிமுதல் செய்த 730 கிலோ கஞ்சா அழிப்பு

ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், பல்வேறு சோதனை மற்றும் நடவடிக்கைகளில் பறிமுதல் செய்யப்பட்ட 730 கிலோ கஞ்சா நேற்று அழிக்கப்பட்டது. ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் 78 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை அழிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, பல்வேறு சோதனை, பறிமுதல் நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட 730 கிலோ கஞ்சா நேற்று செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஜி.ஜே.மல்டி கிளேவ் என்ற நிறுவனத்தில் கொட்டி அழிக்கப்பட்டது. அதன் மதிப்பு 73 லட்சம் ரூபாய் என, காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !