உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காய்ச்சல் பாதிப்பு 9 மாத குழந்தை பலி

காய்ச்சல் பாதிப்பு 9 மாத குழந்தை பலி

மதுரவாயல், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண் பிரசாத், 31. இவர், மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் கோவிந்தப்பன்நாயக்கர் தெருவில் குடும்பத்துடன் தங்கி, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிகிறார். இவரது 9 மாத குழந்தை அகிலன், சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 8ம் தேதி குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டது.இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் குழந்தை உயிரிழந்தது தெரிந்தது. இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை