மேலும் செய்திகள்
புரோஸ்டேட் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
14 hour(s) ago
சாலை மைய தடுப்பில் பைக் மோதி மாணவர் பலி
05-Oct-2025
வீல் சேர் குண்டு எறிதல்: சென்னைக்கு வெள்ளி
05-Oct-2025
மாநில தடகளம்: சென்னை வீரர் அசத்தல்
05-Oct-2025
சென்னை, காரைக்குடி, ஆனந்த் நகரைச் சேர்ந்த ஞானகுருநாதன் மகள் சண்முகேஸ்வரி, 18. அங்குள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., பயோ டெக்னாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.கல்லுாரி சார்பில், 15 நாட்களாக சென்னை, கோடம்பாக்கத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதற்காக, அடையாறு, இந்திரா நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் மகளை அழைத்து செல்ல, ஞானகுருநாதன் சென்னை வந்து கொண்டிருந்தார். அன்று மாலை மாலை 6:00 மணிக்கு, அடையாறு, எல்.பி., சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் 'பங்க்'கிற்கு சண்முகேஸ்வரி சென்றுள்ளார்.'இருசக்கர வாகனம் பெட்ரோல் இல்லாமல் பாதியில் நிற்கிறது. அரை லிட்டர் பெட்ரோல் வேண்டும்' என, ஒரு பாட்டிலில் கேட்டு வாங்கி சென்றார். அடையாறு, இந்திரா நகர் இரண்டாவது தெருவில் வைத்து, பெட்ரோலை தன் உடலில் ஊற்றி, தீ வைத்து கொண்டார். தலை, முகம், இடுப்பு பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.பொதுமக்கள் உதவியுடன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எழும்பூர் 12வது நீதிமன்ற நீதிபதி லட்சுமி, மாணவியிடம் வாக்குமூலம் பெற்றார்.இந்த நிலையில், நேற்று மாலை உயிரிழந்தார். இது குறித்து அடையாறு போலீசார் கூறியதாவது:கொரோனா காலத்தில் மாணவி டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்பின், வலது காது கேட்கவில்லை. சிலரின் கேலி, கிண்டலுக்கும் ஆளாகி உள்ளார். சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால், மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இன்டர்ன்ஷிப் பயிற்சியையும் முறையாக கற்றுக்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு, தற்கொலை செய்துள்ளார். மாணவி எழுதிய கடிதத்தை கைப்பற்றி உள்ளோம். வேறு எதாவது காரணம் இருக்குமா என, பல்வேறு கோணங்களில் விசாரிக்கிறோம். பெட்ரோல் கொடுத்த 'பங்க்' உரிமையாளரிடம் விசாரிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
14 hour(s) ago
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025