உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விடுமுறையால் வெறிச்சோடிய கோயம்பேடு சந்தை

விடுமுறையால் வெறிச்சோடிய கோயம்பேடு சந்தை

கோயம்பேடு,காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டதால், கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் ஒரு வாரம் பரபரப்பாக விற்பனை நடந்தது.காய்கறி சந்தையில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். காணும் பொங்கலை முன்னிட்டு, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பழம் மற்றும் பூ மார்க்கெட்டில் சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. நேற்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ