உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செவித்திறன் பரிசோதனை 2 வயதுக்குள் அவசியம்

செவித்திறன் பரிசோதனை 2 வயதுக்குள் அவசியம்

சென்னை:''குழந்தையின் இரண்டு வயதுக்குள் பரிசோதனை செய்து கொள்வதன் வாயிலாக, செவித்திறனை அளிக்க முடியும்,'' என, ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் பிரசன்ன குமார் தெரிவித்தார்.சென்னை, போரூர் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், 18வது காக்ளியர் கருவி பொருத்துதல் ஆண்டு விழா, நேற்று நடந்தது.இதில், பிறவியிலேயே காது கேளாமையால் பிறந்து, 'காக்ளியர்' கருவி பொருத்தி கொண்ட சிறார்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.இது குறித்து, மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை துறை தலைவர் பிரசன்ன குமார் கூறியதாவது:பிறந்த சில நாட்களிலேயே குழந்தைகளுக்கு செவித்திறன் சோதனை செய்து, 'காக்ளியர்' கருவி பொருத்துதல் வாயிலாக, கேட்கும் திறனை அவர்களுக்கு அளிக்க முடியும்.எனவே, ராமச்சந்திரா மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் உடனடியாக, செவித்திறன் சோதனை நடத்தப்படுகிறது.இச்சிகிச்சையை, இரண்டு வயதுக்குள் மேற்கொள்வது நல்லது. கடந்த ஐந்தாண்டுகளில் முழுமையாக காது கேட்காத ஒன்பது குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு, ஐந்து பேருக்கு, 'காக்ளியர்' கருவி பொருத்தப்பட்டு பயனடைந்துள்ளனர்.'ஆயுஷ்மான் பாரத்' திட்டம், முதல்வர் காப்பீடு திட்டத்தின் வாயிலாக, இச்சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை