உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குழந்தை கடத்தும் நபராக சித்தரிக்கப்பட்டவர் புகார்

குழந்தை கடத்தும் நபராக சித்தரிக்கப்பட்டவர் புகார்

எண்ணுார், எண்ணுார், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் நேரு, 56. இவரது புகைப்படத்தை சிலர், 'குழந்தை கடத்தும் நபர்' என சித்தரித்து, வதந்தி பரப்பினர். இதனால், நேரு வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், கடும் மன உளைச்சலுக்கும் ஆளானார். இந்நிலையில், நேற்று, வழக்கறிஞர்களுடன் வந்த நேரு, எண்ணுார் உதவி கமிஷனர் வீரகுமாரிடம், புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அதில், தன் புகைப்படத்தை குழந்தை கடத்தும் நபர் என, செய்தியுடன் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரியுள்ளார்.இதற்கிடையில், இவர், 1989ம் ஆண்டு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, 10 ஆண்டுகளுக்கு முன், சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.மேலும், இவர் மீது, ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை