உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்திப்பாரா மேம்பாலத்தில் தவறி விழுந்தவர் படுகாயம்

கத்திப்பாரா மேம்பாலத்தில் தவறி விழுந்தவர் படுகாயம்

ஆலந்துார்,சென்னை போரூர், பாய் கடையைச் சேர்ந்தவர் வல்லரசு, 24; கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி செய்து வருகிறார்.நேற்று மீனம்பாக்கத்தில் கேமரா பொருத்த, பட் ரோட்டில் இருந்து மீனம்பாக்கம் நோக்கி, கத்திப்பாரா மேம்பாலம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றார். பாலத்தின் வளைவில் திரும்பும் போது, வாகனத்தின் முன்புறம் வைத்திருந்த கம்பியால், திருப்ப முடியாமல் நிலைதடுமாறினார்.பின், மேம்பால தடுப்பு சுவரில் மோதி, 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில், அவரது கை உடைந்து கதறினார். தகவல் அறிந்து வந்த மவுன்ட் போக்குவரத்து போலீசார், வல்லரசுவை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை