| ADDED : ஜன 06, 2024 12:05 AM
நுண்கலைகளை ஊக்குவிக்கும் நிறுவனமாக, அப்பாஸ் கல்ச்சுரல் விளங்கி வருகிறது. இதனுடன், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ், சேர்ந்து 32ம் ஆண்டு ஏழு நாள் கலை விழாவை, சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று துவங்குகின்றன. விழாவை நீதியரசர் மகாதேவன் துவக்கி வைக்கிறார்.அனிதா குஹா நடனக் குழுவினரின் 'ஏழுமலையின் புகழ்' எனும் தலைப்பில் நாட்டிய நாடகம் நடக்கிறது.நாளை, எஸ்.பி.பி., சரண் வழங்கும் 'எஸ்.பி.பி.,யின் கிளாசிக்' எனும், திரை இசை நிகழ்ச்சி நடக்கிறது. பின், ஜன., 13ல் இருந்து 17 வரை ஐந்து நாட்கள், தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடக்கின்றன.அயோத்தி ராமர் கோவில் பூமி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 'எங்கும் ராமன் எதிலும் ராமன்' எனும் சிறப்பு இசை சொற்பொழிவு நடத்தப்படுகிறது.பிரபல கர்நாடக இசை கலைஞர்களான சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ மகாதேவன், ராஜேஷ் வைத்யா, ரஞ்சனி -காயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.விழாவிற்கான டிக்கெட்டுகளை, 'புக்மை ஷோ' செயலி மற்றும் இணையதளத்தில் பதிவு செய்யலாம். விபரங்களுக்கு 97106 33633 என்ற மொபைல் எண்ணை அழைக்கலாம் என, நிகழ்ச்சி அமைப்பாளர் கார்த்திக் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.