உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலைமறைவு குற்றவாளி ஏர்போர்ட்டில் சிக்கினார்

தலைமறைவு குற்றவாளி ஏர்போர்ட்டில் சிக்கினார்

சென்னை, அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூமாலை, 42. இவர் மீதான புகாரில், அரியலுார் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் தேடிய நிலையில், வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். இதையடுத்து, பூமாலை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 'ஏர் ஏசியா' விமானத்தில் வந்த பூமாலையின் பாஸ்போர்ட் ஆவணங்களை அதிகாரிகள் பரிசோதித்த போது, அவர் தேடப்படும் குற்றவாளி என தெரிந்தது. இதையடுத்து, பூமாலையை கைது செய்து, அரியலுார் மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ