திருமங்கலம்: திருமங்கலம் அருகில், போதை பொருள் வழக்கில், பாடியைச் சேர்ந்த தியேனேஷ்வரன், 26, என்பவரை போலீசார் கைது செய்து, நான்கு ஸ்டாம்புகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இவர் அளித்த தகவல்படி, முகப்பேர் சீனிவாசன், 25, தேனாம்பேட்டை சர்புதின், 44, வளசரவாக்கம் சரத், 30, ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இவர்களிடமிருந்து, 21 லட்சம் ரூபாய், 10 கிராம் ஓ.ஜி., கஞ்சாவை பறிமுதல், செய்ததாக கூறப்படுகிறது. சர்புதினை, தேனாம்பேட்டையில் கைது செய்த போது, அவருடன் தொடர்பில் இருந்ததாககூறி, அ.தி.மு.க., நிர்வாகி ஹரி மற்றும் சாய் ஆகியோரை, போலீசார் பிடித்துள்ளனர். இருவரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், அ.தி.மு.க., நிர்வாகிகளை பொய் வழக்கில் கைது செய்திருப்பதாக கூறி, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர், நேற்று இரவு, திருமங்கலம், ஜெ.ஜெ., நகர், நொளம்பூர் காவல் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு மா நில இணை செயலர் பாலமுருகன் கூறுகையில், ''அ.தி.மு.க., கன்டென்ட் கிரியேட்டர்கள் இருவரை, விளக்கமின்றி கைது செய்து மறைத்து வைத்துள்ளனர். தேர்தல் பயத்தில் முதல்வர் துாண்டுதல் பெயரில் கைது செய்துள்ளது. கமிஷனக்கு புகார் அ ளித்துள்ளோம்; நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்,'' என்றார்.