உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு ஆர்.கே.நகரில் சரிபார்த்த அ.தி.மு.க.,வினர்

வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு ஆர்.கே.நகரில் சரிபார்த்த அ.தி.மு.க.,வினர்

தண்டையார்பேட்டை:ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர் பெயர் பட்டியலில், 1,000 வாக்காளர்களில் 300 வாக்காளர்கள் பெயர்கள் டம்மியாக உள்ளன.கடந்த எம்.பி., தேர்தலில் நடந்த குளறுபடிகளால் தான், தி.மு.க., வினர் வெற்றி பெற்றனர். உயிரோடு இருப்பவர்கள் பெயர்களை நீக்கி விட்டு, இறந்தவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இந்த தில்லு, முல்லு வேலைகளை அரங்கேற்றினர்.இந்த குளறுபடிகளை நீக்க வேண்டும் என, அ.தி.மு.க., சார்பில், தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டது. இருந்தும், நடவடிக்கை இல்லை. இதையடுத்து அ.தி.மு.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி, 42வது வார்டுக்குட்பட்ட சேனியம்மன் கோவில் திட்ட குடியிருப்பு பகுதி, மன்னப்பன் தெரு, மேயர்பாசுதேவ் தெரு பகுதியில் நேற்று வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில், அ.தி.மு.க.,வினர் வீடு, வீடாக சென்று முகவரி மற்றும் இருப்பிடம் மாறிய வாக்காளர்கள், விடுபட்ட வாக்காளர்கள், இறந்த வாக்காளர்களின் விவரங்களை கேட்டறிந்தனர். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடியான பெயர்களை நீக்க பாகப்பொறுப்பாளர்களுக்கு குறிப்பேடு வழங்கினர். ஒவ்வொரு பாகத்திலும் முகவரி மாறிய, இடம் பெயர்ந்த வாக்காளர்கள், இறந்த வாக்காளர்கள் எத்தனை பேர் என, கள ஆய்வு நடத்தி முறையான வாக்காளர் பட்டியலை பாக பொறுப்பாளர்கள் விரைந்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை