ஏர்போர்ட் டிஜியாத்ரா தனி ஆட்கள் நியமனம்
சென்னை,விமான நிலையங்களில் பயணியர் முக அடையாளத்தை காண்பித்து உள்ளே எளிதில் நுழைவதற்காக, 'டிஜியாத்ரா' என்ற சேவையை, மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இந்த சேவை, கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு முனையமான டி1 மற்றும் டி4 முனையங்களில், பயணியர் இச்சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், இந்த சேவையை அடிக்கடி பயன்படுத்த முடியாமல் போவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்திரா கேட் வழியில் செல்லும் பயணியருக்கு உதவும் வகையில், பயிற்சி பெற்ற தனியார் நிறுவன ஊழியர்கள் 100 பேரை, ஒப்பந்த அடிப்படையில், பணிக்கு நியமிக்கப்ட்டுள்ளனர். இவர்கள் ஷிப்ட அடிப்படையில் பணியில் இருப்பர். இதன் காரணமாக பயணியர் சிரமமின்றி பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.***