சலுான் கடையில் தகராறு சவரக்கத்தியால் வெட்டு
கொளத்துார், கொளத்துார், பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், 43. வெல்டிங் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 11:00 மணியளவில், கொளத்துாரில் உள்ள சலுான் கடையில் முகச்சவரம் செய்ய சென்றுள்ளார். அப்போது சரியாக சவரம் செய்யாததால், சலுான் கடையில் வேலை பார்த்த ராஜேஷ், 28 என்பவருடன் தகராறு செய்துள்ளார். ஆபாசமாக திட்டியதால் ஆத்திரமடைந்த ராஜேஷ், கையில் வைத்திருந்த சவரக்கத்தியால், செல்வகுமாரின் கையில் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த செல்வகுமார், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அவருக்கு கையில் 19 தையல்கள் போடப்பட்டன. அவர் கொடுத்த புகாரின் படி, ராஜேசை நேற்று மாலை கொளத்துார் போலீசார் கைது செய்தனர்.