உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடியிலிருந்து காஷ்மீருக்கு ராணுவ சிறப்பு வாகனங்கள்

ஆவடியிலிருந்து காஷ்மீருக்கு ராணுவ சிறப்பு வாகனங்கள்

சென்னை, ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவ பணிகளுக்காக, ஆவடியில் இருந்து இலகு ரக சிறப்பு கவச வாகனங்கள், நேற்று காஷ்மீருக்கு அனுப்பப்பட்டன. ஜம்மு - காஷ்மீரில் பிரச்னைக்குரிய பகுதிகளுக்கு, ராணுவ வீரர்கள் விரைவாக செல்வதற்காக, ஆபத்தில் சிக்கியவர்களை மீட்க, இலகு ரக சிறப்பு கவச வாகனங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.இவற்றை பராமரிப்பது எளிது. விரைவாக கழற்றி மாற்ற முடியும். குண்டு துளைக்காதவை. கடினமான பாதைகளிலும், வேகமாக செல்லக் கூடியவை. இவை, உள்நாட்டிலேயே வடிமைக்கப்பட்டுள்ளன.மொத்தம் 35 வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. நேற்று முதற்கட்டமாக 10 வாகனங்கள், ஆவடியில் இருந்து, ஜம்மு - காஷ்மீருக்கு லாரியில் அனுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை