உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சம்பளம் தராதவரை குத்தியவர் கைது

சம்பளம் தராதவரை குத்தியவர் கைது

செம்மஞ்சேரி, செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்தவர் சக்திவேல், 55, கபாலி, 65. இருவரும் கூலி வேலை செய்கின்றனர். நேற்று சக்திவேல், கபாலியை வேலைக்கு அழைத்துச் சென்றார்.பணி முடித்து, இருவரும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்ற போது, கபாலி சம்பளம் கேட்டு உள்ளார். இதற்கு மது, சாப்பாட்டுக்கு சரியாகி விட்டது என, சக்திவேல் கூறி உள்ளார்.இதில் ஆத்திரமடைந்த கபாலி, வீட்டில் இருந்து கத்தியை எடுத்துச் சென்று, சக்திவேல் கழுத்தில் குத்தினார். பலத்த காயமடைந்த சக்திவேல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செம்மஞ்சேரி போலீசார், கபாலியை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை