உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சேதமடைந்த சாலையால் அரும்பாக்கத்தில் அவதி

சேதமடைந்த சாலையால் அரும்பாக்கத்தில் அவதி

அரும்பாக்கம்,அண்ணா நகர் மண்டலம், 106 மற்றும் 107 வார்டுக்கு உட்பட பகுதியில், எம்.எம்.டி.ஏ., காலனி பிரதான சாலை உள்ளது. இந்த சாலை, விநாயகபுரம் பிரதான சாலையில் துவங்கி எம்.எம்.டி.ஏ., வாட்டர் டேங்க் வரை, 2 கி.மீ., துாரம் கொண்டது. இச்சாலையில், அரும்பாக்கம் சந்தை செயல்படுகிறது. அதேபோல், எம்.எம்.டி.ஏ., காலனி பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் அரசு பேருந்துகளும் சென்று வருகின்றன.இந்த பிரதான சாலை குண்டும் குழியுமாக படுமோசமாக காட்சியளிக்கிறது. சமீபத்தில், பள்ளம் ஏற்பட்டுள்ள இடங்களில் தற்காலிகமாக மணல்களை மாநகராட்சி ஊழியர்கள் கெட்டினர். தற்போது மணல்கள் சாலையில் படர்ந்து விபத்து அபாயத்தில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு அப்பகுதியில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை