உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டி அட்ராசிட்டி

இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டி அட்ராசிட்டி

சென்னை: பெண்கள் மட்டுமே இயக்க வேண்டிய இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, மாலை 6:00 மணிக்கு மேல் ஆண்கள் ஓட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுமியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், 'இளங்சிவப்பு ஆட்டோக்கள்' திட்டத்தை, மார்ச் 8ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, சி.என்.ஜி., எனும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய ஆட்டோக்கள் வழங்கப்பட்டு உள்ளன. பெண் பயணியருக்காக, பெண் ஓட்டுநர்களை வைத்து ஆட்டோக்களை இயக்குவது, திட்டத்தின் பிரதான நோக்கம். ஆனால், ஆண் ஓட்டுநர் களால், இத்திட்டம் துவங்கப்பட்ட சில நாட்களிலேயே சிதைக்கப்பட்டது. இதற்கு பயணியர் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், உரிய வழிகாட்டு நெறி முறையை சமூக நலத்துறை அதிகாரிகள் வெளியிட்டனர். இந்நிலையில், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மாலை 6:00 மணிக்கு மேல், ஆண்கள் ஓட்டி வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டக்கூடாது என, தெளிவாக எச்சரித்துள்ளோம். காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 'இருப்பினும் இந்த பிரச்னை தொடர்வதற்கு, சென்னை மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து போலீசாரும் தான் காரணம். அவர்கள் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை