உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.மு.க., பிரமுகர் மீது பெரம்பூரில் தாக்குதல்

தி.மு.க., பிரமுகர் மீது பெரம்பூரில் தாக்குதல்

புளியந்தோப்பு,புதுப்பேட்டை, நரியன்காடு காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 45; மாதவரத்தில் தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்க்கிறார்; தி.மு.க.,வில் எழும்பூர் தொகுதி மாவட்ட துணை அமைப்பாளராகவும் உள்ளார்.நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையை கடக்க முயன்ற பெண்மீது, எதிர்பாராவிதமாக ஜெயகுமார் ஓட்டிய வாகனம் மோதியது.இதில் ஏற்பட்ட தகராறில், பெண்ணின் கணவர் உட்பட ஐவர், ஜெயகுமாரை அடித்து உதைத்தனர். காயமடைந்த ஜெயகுமார், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து, புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை