உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேக்கரி பொருள் தயாரிப்பு பயிற்சி

பேக்கரி பொருள் தயாரிப்பு பயிற்சி

சென்னை:சென்னையில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், பேக்கரி பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி வகுப்பு, நாளை மறுநாள் முதல் 16ம் தேதி வரை நடக்க உள்ளது.மூன்று நாட்களும், காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை வகுப்புகள் நடக்கும். பயிற்சியில் பேக்கரி பொருட்களின் மூலப்பொருள், பிராண்ட், கருவிகள் மற்றும் உபகரணங்கள் குறித்து விளக்கப்படும்.ஹைதராபாத் கராச்சி பிஸ்கட், ஜெர்ரா உப்பு பிஸ்கட், இனிப்பு குக்கிகள், ஈஸ்ட் புளிக்க வைக்கப்பட்ட பாம்பே பன், இனிப்பு ரொட்டி, கிரீம் பன், பழ ரஸ்க், பப்ஸ் வகைகள், கேக் வகைகள் எப்படி தயாரிப்பது என பயிற்சி அளிக்கப்படும்.அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்தும் விளக்கப்படும். கட்டணம் 5,000 ரூபாய். மேலும் விபரங்களுக்கு, www.editn.in இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை