உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சைதை - தேனாம்பேட்டை பாலம் ஒரு கி.மீ.,க்கு தடுப்புகள் அகற்றம்

 சைதை - தேனாம்பேட்டை பாலம் ஒரு கி.மீ.,க்கு தடுப்புகள் அகற்றம்

சென்னை: சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணியிடத்தில், சாலையை மறித்து வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் ஒரு கி.மீ.,க்கு அகற்றப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என, அதிகாரிகள் கூறின ர். சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை, 3.2 கி.மீ., துாரத்திற்கு 621 கோடி ரூபாயில், இரும்பு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கான அடித்தளம் அமைக்கும் பணி, 98 சதவீதம் முடிந்துவிட்டது. இதற்கான முன் வார்ப்பு கான்கிரீட் கட்டமைப்புகள், குஜராத், சண்டிகர், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் தயாரித்து, இங்கு எடுத்து வந்து இணைக்கப்படுகின்றன. தற்போது, பில்லர்களுக்கு இடையே ' டெக்' என்ற உத்திரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணியை வேகப்படுத்தும் வகையில், நெடுஞ்சாலைத் துறை செயலர் செல்வராஜ், பணி தளத்தை நேற்று பார்வையிட்டார். வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் கான்கிரீட் கட்டமைப்புகள் முறையாக பொருத்தப்பட்டனவா, முடிந்த பணிகள், இனிமேல் நடக்க வேண்டிய பணிகள் குறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார். அதிகாரிகள் கூறியதாவது: மேம்பாலத்திற்கு அடித்தளம் அமைக்கும் பணியால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தடுக்க, சாலையில் இரும்பு தடுப்புக ள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், பில்லர் அமைத்த பகுதிகளில், ஒரு கி.மீ., துாரத்தில் இருந்த தடுப்புகள், தற்போது அகற்றப்பட்டு ள்ளன. இதனால், குறிப்பிட்ட பகுதியில், மூடப்பட்ட சாலையின் அகலம் அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். ஜன., 7ம் தேதிக்குள், அடித்தள ம் அமைக்கும் பணியை முழுதாக முடித்து, அனைத்து தடு ப்புகளையும் அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. அடித்தளம் வலுவான பில்லர்களில், டெக் அமைக்கும் பணியை வேகப்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்