உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஆஸ்திரேலியாவில் பாரதிக்கு விழா

 ஆஸ்திரேலியாவில் பாரதிக்கு விழா

ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லாந்து மாகாணம், பிரிஸ்பேன் நகரில், 'இளவேனில் விழா - 2025' நிகழ்ச்சி நடந்தது. க்வீன்ஸ்லாந்து தமிழ் மன்றம், ட்யூபிளக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், தபம்ஸ் குழுமம் மற்றும் உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து நடத்தின. இதில், மகாகவி பாரதியின் உருவப்படத்தை, உரத்த சிந்தனையின் துணைத்தலைவர் மேகநாதன் திறந்து வைத்து, பாரதி உலா எனும் நிகழ்ச்சியை துவக்கும் விதமாக, அதற்கான இலட்சினையை வெளியிட்டார். அதை, ட்யூபிளக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனர் அன்சார் அகமது பெற்றார். நிகழ்வில் 250க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர். 'எனக்கு பிடித்த பாரதி' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. புலவர் மா.ராமலிங்கம் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் நடந்தது. 'குட்டீஸ்'கள், பாரதி வேடமிட்டு வீறு நடைபோட்டனர். பிரிஸ்பேன் தமிழ்ப் பள்ளி மாணவ - மாணவியரின் நாடகம், பார்வையாளர்களை கவர்ந்தது. க்வீன்ஸ்லாந்து தமிழ் மன்றத்தின் தலைவர் ஞானவேல் செல்வம், செயலர் சத்யா ஆகியோர், இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை