உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக் --- கார் விபத்தில்  காதலர்கள் உயிரிழப்பு

பைக் --- கார் விபத்தில்  காதலர்கள் உயிரிழப்பு

பூந்தமல்லி, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 26. இவர், பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடியில் நண்பர்களுடன் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.இவர், நேற்று முன்தினம் இரவு, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காதலி அபிநயா சவுந்தர்யா, 25 என்பவருடன், 'பஜாஜ் டிஸ்கவர்' இருசக்கர வாகனத்தில், புத்தாண்டு கொண்டாட பூந்தமல்லி -- பெங்களூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.செம்பரம்பாக்கம் அருகே, பின்னால் வேகமாக வந்த 'டொயோட்டா' கார் மோதி இருவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில், சாலையோர தடுப்பு சுவரில் மோதி அபிநயா சவுந்தர்யா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த பிரகாஷ் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்து ஏற்படுத்திய ராணிப்பேட்டையைச் சேர்ந்த முகமது அர்ஷத், 27, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஜன 03, 2024 16:07

இவர்கள் புத்தாண்டை வரவேற்கச் செல்லவில்லையென்றால், பாவம், அது (புத்தாண்டு) வர வழி தெரியாமல் தடுமாறும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை