மேலும் செய்திகள்
புழுதி மண்டலமாக மாறிய பொன்னேரி சாலையால் அவதி
04-Aug-2025
அம்பத்துார்:அம்பத்துார் - செங்குன்றம் சாலையில் தொடர்ந்து பைக் சாகசத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது. சென்னை புறநகர் பகுதியில், அம்பத்துார் - செங்குன்றம் சாலை பிரதான சாலையாக உள்ளது. இங்கு, பள்ளி, கல்லுாரி, வேலைக்கு செல்வோர், அரசு பேருந்து, கனரக வாகனங்கள் என, தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அம்பத்துார் முதல் கள்ளிக்குப்பம் வரை மூன்று போலீஸ் சோதனை சாவடி இருந்தும், இரவு வேளைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் 'பைக் ரேஸ்' நடப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த சாலையில், யமஹா ஆர்15 மற்றும் பல்சர் என்.எஸ்., 200 பைக்குகளை மூன்று பேர், அதிவேகமாக ஓட்டி, பின் சக்கரத்தை துாக்கி சாகசம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், முதியவர்கள், பெண்களின் அருகில் சென்று மோதுவது போல பைக் ஓட்டி அச்சுறுத்தி வருகின்றனர். போக்குவரத்து போலீசார் பணியில் இருக்கும்போதே, இவ்வாறு ரேஸ் நடப்பது பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
04-Aug-2025