| ADDED : ஜன 11, 2024 01:23 AM
புத்தக கண்காட்சியில், அரங்குகளைப் பார்வையிட்டு புத்தகம் வாங்கிய தோழியரான, சென்னையைச் சேர்ந்த அனு, 35, மற்றும் திருச்சியைச் சேர்ந்த யமுனா, 35, ஆகியோர் கூறியதாவது:அனு, 35: கடந்த 12 ஆண்டுகளாக புத்தக கண்காட்சிக்கு வருகிறேன். ஒரே நாளில் அரங்குகள் அனைத்தையும் பார்வையிட்டு, நமக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கிச் செல்வது முடியாத காரியம். எனவே, ஒவ்வொரு ஆண்டும் இரு நாட்கள் வருவேன்.பிடித்த புத்தகங்களை எல்லாம் வாங்கி விடுவேன். எனவே, பட்ஜெட் போட்டு, அதற்கேற்ப புத்தகங்களை வாங்க வேண்டும் என திட்டமிடுவதில்லை. கடந்த ஆண்டு 12,000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினேன். தமிழ் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் வாசிக்கப் பிடிக்கும்.யமுனா, 35: நான் திருச்சியில் வசிக்கிறேன். புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டும் என, பல ஆண்டுகளாக திட்டமிட்டும் வர முடியவில்லை.தோழி அனுவின் உதவியால் இம்முறை என் எண்ணம் நிறைவேறியது. ஒரே கூரையின் கீழ், 1,000 அரங்குகளுக்கு மேல், பல லட்சம் தலைப்பில் புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளது, மலைப்பைத் தருகிறது.எனக்குப் பிடித்த புத்தகம் ஏதோ ஓர் அரங்கில் இருக்கும் என்பதால், எல்லா அரங்குகளையும் நிதானமாக பார்வையிட்டு, புத்தகங்களை வாங்கிக் கொண்டிருக்கிறேன். உலகின் மிகப் பெரும் புத்தக கண்காட்சி இதுவாகத் தான் இருக்கும்.