உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உண்டியலை உடைத்து பணம் திருட்டு

உண்டியலை உடைத்து பணம் திருட்டு

எண்ணுார், கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் திருடப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, எர்ணாவூர் - பாலாஜி நகரில், பிரசித்தி பெற்ற அம்பிகா அம்பிகை சிவசக்தி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் பூஜைகள் முடிக்கப்பட்டு, நடை சாத்தப்பட்டது.நேற்று காலை கோவிலை திறந்து பார்த்த போது, உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது.இது குறித்து, கோவில் பூசாரி சீலா, 52, என்பவர், எண்ணுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ