மண்டலங்களுக்குள் செயல்படும் வகையில் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் மாற்றம்
எல்லைக் குழப்பத்தால் தொடர்ந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையிலும், உரிய மண்டலங்களுக்குள் செயல்படும் வகையிலும், சென்னை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.சென்னையில் தற்போதுள்ள போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையங்கள், அந்தந்த மண்டலத்தில் இல்லாமல், வெவ்வேறு மண்டலங்களில் செயல்பட்டு வருவதால், போலீசார் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெயர் மாற்றம்
இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், ஆறு போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. சில பிரிவு அலுவலகங்கள் இடம் மாற்றப்பட்டுள்ளன. யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு, இனி பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவாக செயல்படும். தற்போதுள்ளதுபோல், கொத்தவால்சாவடியில் உள்ள மாநகராட்சி கட்டடத்திலேயே செயல்படும் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு, இனி கொளத்துார் போக்குவரத்து புலனாய்வு பிரிவாக செயல்படும். தற்போதுள்ள கொசப்பூர் மஞ்சம்பாக்கத்திலேயே அலுவலகம் செயல்படும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு, இனி மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வு பிரிவாக மாற்றப்படுகிறது. இதன் அலுவலகம், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் இரண்டாவது தளத்தில் செயல்படும் காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு, இனி கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவாக செயல்படும். காசிமேடு காவல் நிலையத்தில் இருந்த அலுவலகம், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு, இனி மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவாக செயல்படும். கிண்டி காவல் நிலையத்திலிருந்த இதன் அலுவலகம், மெரினா காவல் நிலையத்தில், மூன்றாம் தளத்திற்கு மாற்றப்படுகிறது அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு, திருவல்லிக்கேணி போக்குவரத்து புலனாய்வு பிரிவாக மாற்றப்படுகிறது. தற்போது இயங்கி வரும் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திலேயே செயல்படும் இடம் மாற்றம்
புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகம், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து, அயனாவரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகம், சாஸ்திரி நகர் காவல் நிலையத்தின் இரண்டாம் தளத்தில் இருந்து, கிண்டி காவல் நிலையத்தின் இரண்டாம் தளத்திற்கு மாற்றப்படுகிறது. மாற்றமில்லை
வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு, தற்போதுள்ள தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில், 2வது தளத்திலேயே செயல்படும் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு, அண்ணாநகர் காவல் நிலையத்திலேயே செயல்படும் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு தற்போதுள்ள கோயம்பேடு சந்தை, காளியம்மன்கோவில் தெருவில் செயல்படும் பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு, தற்போதுள்ள அசோக்நகர் காவல் நிலையத்தில், மூன்றாம் தளத்தில் செயல்படும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு தற்போதுள்ள பரங்கிலை காவல் நிலையத்திலேயே செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வரும் ஆக., 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
புதிய துணை கமிஷனர்
போக்குவரத்து புலனாய்வு பிரிவில் மாற்றம் குறித்து, போலீஸ் உயர்அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை மேற்கு மண்டலத்திற்கென துணை கமிஷனர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டல உதவி கமிஷனர் அலுவலகம், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திலிருந்து, காசிமேடு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட உள்ளது.கிழக்கு மண்டல உதவி கமிஷனர் அலுவலகம்,சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் இருந்து, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட உள்ளது. நிர்வாக வசதிக்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -