உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை - ராஜஸ்தான் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை - ராஜஸ்தான் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை, கோடை விடுமுறையையொட்டி, சென்னை, கோவை மற்றும் ஈரோடில் இருந்து ராஜஸ்தானுக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:★ சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும் 9ம் தேதி முதல் ஜூலை 2 வரை, புதன்கிழமை இரவு 7:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில் பகல் 12:30 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோதிக்கு செல்லும்★ பகத் கி கோதியில் இருந்து வரும் 12 முதல் ஜூலை 5ம் தேதி வரை சனிக்கிழமை, காலை 5:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 11:15 மணிக்கு சென்ட்ரல் வரும்★ கோவையில் இருந்து, வரும் 10 முதல் ஜூலை 3 வரை, வியாழன் அதிகாலை 2:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில் காலை 11:30 மணிக்கு பகத் கி கோதி செல்லும்★ பகத் கி கோதியில் இருந்து, வரும் 13 முதல் ஜூலை 6 வரை, ஞாயிறு இரவு 11:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நான்காம் நாள் காலை 9:30 மணிக்கு கோவை வரும்★ ஈரோடில் இருந்து, வரும் 8 முதல் ஜூன் 10 வரை, வியாழன் காலை 6:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாம் நாள் காலை 4:30 மணிக்கு, ராஜஸ்தான் மாநிலம் பார்மேர் செல்லும்★ பார்மேரில் இருந்து, வரும் 11 முதல் ஜூன் 13 வரை, வெள்ளிக்கிழமை இரவு 10:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாம் நாள் இரவு 8:15 மணிக்கு ஈரோடு செல்லும். இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளதுஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை