உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தனியார் பொறியியல் கல்வி கட்டண புகார்: விசாரிக்க புதிய குழு

தனியார் பொறியியல் கல்வி கட்டண புகார்: விசாரிக்க புதிய குழு

சென்னை : தனியார் பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டண புகார்களை விசாரிக்க, மூன்று பேர் கொண்ட புதிய குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.தமிழக அரசின் முதன்மை செயலர் கண்ணன் பிறப்பித்துள்ள அரசாணை:தனியார் பொறியியல் கல்லூரிகளில் பெறப்படும் நன்கொடை மற்றும் கல்விக் கட்டணத்தை ஆய்வு செய்யவும், இவை தொடர்பான புகார்களை விசாரிக்கவும், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் துணைத் தலைவர் பழனிசாமியின் தலைமையில், ஐந்து பேர் கொண்ட குழு செயல்பட்டு வந்தது.இக்குழுவை மாற்றி அமைக்க வேண்டுமென, தொழில்நுட்ப கல்வி செயலர், தமிழக அரசை கேட்டிருந்தார். அதன்படி, தனியார் பொறியியல் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் நன்கொடை மற்றும் கல்விக் கட்டணத்தை ஆய்வு செய்யவும், இவை தொடர்பான புகார்களை விசாரிக்கவும், மூன்று பேர் கொண்ட புதிய குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. இதில், அண்ணா பல்கலை பேராசிரியர்கள் ஜெயபாலன், பி.கே.பழனிசாமி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி அல்லது அதன் உறுப்பு கல்லூரியில் உதவி பேராசிரியர் தரத்திற்கு குறையாத ஒருவர், உறுப்பினர்களாக இருப்பர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நமது சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ