| ADDED : ஆக 05, 2011 02:34 AM
சென்னை : தமிழகத்தில் உள்ள, 'கேபிள் டிவி' ஆபரேட்டர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்க, வரும் 9ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அரசு, 'கேபிள் டிவி' நிறுவனத்தில், தமிழகத்தில் உள்ள, 'கேபிள் டிவி' ஆபரேட்டர்கள் இணைவதற்கு, கடந்த சில தினங்களுக்கு முன், அரசு அறிவிப்பை வெளியிட்டது. 'கேபிள் டிவி' ஆபரேட்டர்கள் ஒவ்வொருவரும், தனித்தனியே ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பிக்க, கடைசி தேதி ஆக., 5 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கேபிள் டிவி' ஆபரேட்டர்கள், ஆன்-லைனில் விண்ணப்பிக்க, வரும் 9ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு, 'கேபிள் டிவி' ஒளிபரப்பாளர்கள் சங்க மாநில தலைவர் யுவராஜ் கூறும்போது, 'தமிழகம் முழுவதும், 40 ஆயிரம் 'கேபிள் டிவி'ஆபர÷ட்டர்கள் உள்ளனர். இதுவரை 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசுக்கு, விண்ணப்பம் மூலம், இரண்டு கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க, 9ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், விரைவில் அனைத்து ஆபரேட்டர்களும் விண்ணப்பிப்பர்' என்றார்.