உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழை நீர் தேக்கம்: முற்றிலும் முடங்கிப் போன அம்பேத்கர் கல்லூரி சாலை

மழை நீர் தேக்கம்: முற்றிலும் முடங்கிப் போன அம்பேத்கர் கல்லூரி சாலை

வியாசர்பாடி : வியாசர்பாடி கணேசபுரம் ரயில்பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழை நீரால், அம்பேத்கர் கல்லூரிச்சாலையில் கடந்த 18ம் தேதி இரவு முதல் போக்குவரத்து முற்றிலும் முடக்கம், கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை கல்யாணபுரம் ரயில்பாலத்திற்கு மேல் நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் கட்டி வருகிறது. இதனால், மாநகர பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அம்பேத்கர் கல்லூரி சாலையில் திருப்பிவிடப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த 18ம் தேதி பெய்த கனமழையால் கணேசபுரம் ரயில்பாலத்தின் கீழ், குளம் போல் நீர் தேங்கியது. ராட்சத மோட்டார்கள் மூலம், நேற்று முன்தினம் இரவு முதல் நீர் வெளியேற்றப்பட்டாலும் நீர் குறைந்தபாடில்லை. இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் பெரம்பூர் மேம்பாலத்தின் மேல் சுற்றி செல்கிறது. இதனால் ஜமாலியா, ஓட்டேரி, புளியந்தோப்பு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆண்டு தோறும் மழைக் காலங்களில் இதே நிலை தான் நீடிக்கிறது. படகு விடுவது, மோட்டார் வைத்து நீரை வெளியேற்றுவது நடக்கும் நிகழ்வுகளை பத்திரிகையாளர்கள் படம் பிடிப்பது, பெரியார் நகர், பெரவள்ளூர், பெரம்பூர் சுற்றுவட்ட பகுதிகளிலிருந்து வெளியேறும் மழைநீர் செல்ல போதிய கால்வாய் இல்லை, அதற்கு வழி செய்தால் தான் இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்